2015-03-10 16:49:00

ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்காப்புக் கவசங்களாக கிறிஸ்தவர்கள்


ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்காப்புக் கவசங்களாக சிரியா கிறிஸ்தவர்கள்

 

மார்ச்,10,2015. எந்தப் பிணையத் தொகையும் வழங்காமல் ஐ.எஸ் இஸ்லாமியப் புரட்சியாளர்களிடமிருந்து 52 கிறிஸ்தவக் குடும்பங்களின் விடுதலையைப் பெற்றுள்ள போதிலும், இன்னும் நிறையக் குடும்பங்கள் விடுதலைச் செய்யப்பட வேண்டியுள்ளது என அறிவித்தார் சிரியாவிற்கான திருப்பீடத் தூதர்.

அனைத்துக் கிறிஸ்தவக் குடும்பங்களையும் விடுவிப்பதற்கான முயற்சியின் இடையே குர்த் இனத்தவரின் தாக்குதல்கள் தலையிட்டதால், விடுதலை தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றார், சிரியாவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி.

தங்களை குர்த் இனத்தவரின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு கவசமாகப் பயன்படுத்தவே ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள், இக்கிறிஸ்தவக் குடும்பங்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என தான் நம்புவதாகவும் கூறினார் பேராயர் செனாரி.

கிறிஸ்தவர்கள் சிரியாவில் ஆற்றும் பிறரன்புப் பணிகளை அறிந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை மதிப்புடனேயே நடத்துவதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

ஆதாரம்: Asia News/வத்திக்கான வானொலி.

 








All the contents on this site are copyrighted ©.