2015-03-07 15:53:00

மார்ச்13 வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு


மார்ச்,07,2015. இம்மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமை வகித்து நடத்துவார் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு Guido Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றி தனிப்பட்ட நபர்களுக்கு பாவமன்னிப்பும் வழங்குவார் என்றும் பேரருள்திரு Marini அவர்கள் அறிவித்துள்ளார்.

இன்னும், புனித பூமியில் புனித இடங்கள் காக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வத்திக்கானுக்கும் ஐ.நா.வுக்கும் அழைப்பு விடுத்துள்ளது பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சகம்.

எருசலேமில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருத்துவ கல்லூரியும், பெத்லகேமில் மசூதியும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது பாலஸ்தீன வெளி விவகார அமைச்சகம்.

புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புனித இடங்கள் காக்கப்படுவதற்கு, வத்திக்கானும், அனைத்துலக சமுதாயமும் ஆவன செய்யுமாறு கேட்டுள்ள பாலஸ்தீன அமைச்சகம், எருசலேம் Normtsiaun ஆலயத்துக்குத் தீ வைத்து, கிறிஸ்தவம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவத்துக்கு எதிராகப் பழிச்சொற்கள் எழுதப்பட்டதற்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.