2015-03-07 15:49:00

ஜப்பானில் கிறிஸ்தவம் மீண்டும் புத்துயிர்பெற்றதன் 150ம் ஆண்டு


மார்ச்,07,2015. “நம் விசுவாச வாழ்வை கிறிஸ்து என்ற பாறையின் மீது கட்டுவோம்” என்ற வார்த்தைகளை தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஜப்பானில் கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்விலிருந்து பொதுவில் வெளிப்படையாக வாழத் தொடங்கியதன் 150ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்கு, பிலிப்பீன்ஸ் கர்தினால் Orlando B. Quevedo அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.

இம்மாதம் 14 முதல் 17 வரை நாகசாகியில் நடைபெறும் நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, பிலிப்பீன்சின் Cotabato பேராயர் கர்தினால் Quevedo அவர்கள் கலந்துகொள்வார்.

ஜப்பானில் ஏறக்குறைய 1549ம் ஆண்டில் போர்த்துக்கீசிய மறைபோதகர்களால் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. பின்னர் கிறிஸ்தவர்கள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவமும் தடைசெய்யப்பட்டது. 1858ம் ஆண்டின் ஹாரிஸ் உடன்படிக்கையினால் வெளிநாட்டவர் அந்நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1865ம் ஆண்டில் மீண்டும் கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.