2015-03-03 15:29:00

போதைப்பொருள் வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சரிசமநிலை அவசியம்


மார்ச்,03,2015.  சட்டத்துக்குப் பறம்பான போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சரிசமநிலையுடன் அணுகும் முறையைப் பரிந்துரைத்துள்ளது அனைத்துலக போதைப்பொருள் கட்டுப்பாட்டு கழகம்(INCB).  

போதைப்பொருள் வர்த்தகமும், போதைப்பொருளைப் பயன்பாடும் உலகெங்கும் கடும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன என்று INCB என்ற அக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது. 

இலத்தீன் அமெரிக்காவில் cocaine வர்த்தகம், ஆப்ரிக்காவில் amphetamine அறிமுகம், ஆசியாவில் poppy பயிரிடப்படுவது, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில மருந்துகள் என உலகின் அனைத்துப் பகுதிகளும் போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதனைக் களைவதற்குச் சரிசமநிலை அணுகுமுறை அவசியம் என்றும்  INCB கழகத் தலைவர் மருத்துவர் Lochan Naidoo கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.