2015-03-03 15:18:00

பாகிஸ்தானில் தவக்கால ஆன்மீகப் பிறரன்புப் பயணங்கள்


மார்ச்,03,2015. தவக்காலத்தை சிறப்பான ஒரு காலமாக அமைக்கும் நோக்கத்தில், பாகிஸ்தான் உயர்மறைமாவட்டம் ஒன்று பிறரன்புப் பயணங்களை நடத்தி வருகின்றது.

மனவளர்ச்சி குன்றியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைப் பாரமரிக்கும் இல்லங்கள், கருணை இல்லங்கள், பிரச்சனையில் சிக்கியுள்ள சிறார் மையங்கள், Mariamabad அன்னைமரியா திருத்தலம் போன்ற இடங்கள் ஒவ்வொன்றுக்கும் தவக்காலத்தில் ஒருநாள் ஆன்மீகப் பயணமாக விசுவாசிகளை அழைத்துச் செல்கின்றது லாகூர் உயர்மறைமாவட்டம்.

இம்மையங்களைப் பார்வையிடும் மக்கள், அவ்வில்லத்தில் இருப்பவர்களுக்குப் பொருளுதவி செய்வதோடு, அவர்களோடு அமர்ந்து உண்டு செபித்து ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தானின் லாகூர் உயர்மறைமாவட்டம், இந்தப் பிறரன்பு ஆன்மீகப் பயணங்களை தவக்காலத்தில் நடத்தி வருகின்றது. Mariamabad அன்னைமரியா திருத்தலம், தெற்கு ஆசியாவில் புகழ்பெற்றதாகும்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.