2015-03-03 14:41:00

கடுகு சிறுத்தாலும் - எளிய தீர்வுகள்… எட்டாத தூரம்


அறிவுத்திறன் எண்ணிக்கை (I.Q.) மிக அதிக அளவு கொண்ட பன்னாட்டு அறிஞர்களின் கூட்டம் ஓன்றில் கலந்துகொண்ட நால்வர், அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மேசையில், உப்பு இருக்கவேண்டிய குப்பியில் மிளகும், மிளகு குப்பியில் உப்பும் தவறாக நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டனர். தங்கள் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டு, அந்தக் குப்பிகளில் உள்ளவற்றை, எவ்விதம், சிந்தாமல், சிதறாமல் மாற்றிவைக்க முடியும் என்பதை நால்வரும் சிந்தித்தனர். சிறிது நேரத்தில் விடையும் கண்டனர். மேசையில் இருந்த பல்குத்தும் குச்சி, வாய் துடைக்கும் 'நாப்கின்' காகிதம், ஒரு சிறிய தட்டு இவற்றைத் தயாராக வைத்துக்கொண்டு, அப்பக்கமாய் உணவு பரிமாற வந்தவரிடம் தங்கள் திறமையைக் காட்ட விழைந்தனர். பணியாளரை அழைத்து, "இந்தக் குப்பிகள் தவறாக நிரப்பப்பட்டுள்ளன" என்று ஒரு குறும்புப் பணிவுடன் சொன்னார்கள். உடனே அந்தப் பணியாளர், "ஓ, அதுவா? மன்னிக்கவும்" என்று சொன்னபடி, குப்பிகளுக்கு மேலிருந்த மூடிகளை மாற்றிவைத்துவிட்டு நகர்ந்தார்.

அறிவுத் திறன் அதிகமாகும்போது, எளிய தீர்வுகள் எட்டாத தூரம் போய்விடுமோ?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.