2015-03-03 15:16:00

அரபு வசந்தம்-திருஅவையின் பணிக்குப் பாதிப்பில்லை, ஆயர்கள்


மார்ச்,03,2015. தற்போது முழுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வட ஆப்ரிக்காவில் அரபு வசந்தம் என்ற எழுச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் தாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்று அப்பகுதி ஆயர்கள் கூறியுள்ளனர்.

'அத் லிமினா' சந்திப்பையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று சந்தித்த, மொரோக்கோ, அல்ஜீரியா, டுனிசியா, லிபியா ஆகிய வட ஆப்ரிக்க நாடுகளின்  10 ஆயர்கள்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

வட ஆப்ரிக்காவின் இப்பகுதி, புவியியல் மற்றும் கலாச்சார அமைப்பின்படி, ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகியவை சந்திக்கும் பகுதியாக அமைந்துள்ளது என்றுரைத்துள்ள ஆயர்கள், வட ஆப்ரிக்காவில் தாங்கள் நம்பிக்கையின் பணியாளர்களாக வாழ்வதற்கு ஆண்டவரால் அழைக்கப்பட்டிருப்பதை உறுதியாக உணர முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வட ஆப்ரிக்காவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவை முஸ்லிம்களோடு உரையாடலில் ஈடுபட்டு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், CERNA எனப்படும் இப்பகுதி ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.