2015-02-21 14:31:00

கடுகு சிறுத்தாலும் – சோதனையைத் தேடி...


"அந்த ஓடையில் நீ குளிக்கக்கூடாது" என்று தந்தை தன் மகனிடம் கண்டிப்பான கட்டளையிட்டார். மகனும், "சரி அப்பா" என்று தலையாட்டினான். அன்று மாலை, மகன், நனைந்த துண்டுடன் வீட்டுக்குள் வருவதைப் பார்த்தத் தந்தை, "எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டார். "ஓடையில் குளித்துவிட்டு வருகிறேன்" என்று மகன் பதில் சொன்னான். "ஓடையில் குளிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேனே? பின் ஏன் அப்படிச் செய்தாய்?" என்று தந்தை கேட்டார். "அப்பா, கையில் துண்டு இருந்ததால் ஓடையில் இறங்கிவிட்டேன்" என்று மகன் சொன்னதும், "ஏன் துண்டை எடுத்துக்கொண்டு போனாய்?" என்று தந்தை கேட்டார். "நான் ஓடைப் பக்கம் போகும்போது, குளிப்பதற்கு சோதனை வந்தால் என்ன செய்வது என்று யோசித்துதான் துண்டை கையோடு எடுத்துச் சென்றேன்" என்று விளக்கம் தந்தான் மகன்.

சோதனை நம்மைத் தேடி வருகிறதா? அல்லது, நாம் சோதனையைத் தேடிச் செல்கிறோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.