2015-02-19 15:43:00

மனித வர்த்தகத்திற்கு எதிராக தென்னாப்ரிக்க ஆயர்கள்


பிப்.19,2015 உலகெங்கும் மிக இலாபகரமாக நடைபெறும் போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றின் வர்த்தகங்களைப் போலவே, மனித வர்த்தகமும் மிக இலாபகரமான முறையில் நடைபெறுகிறது என்று தென்னாப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

துவங்கியுள்ள தவக்காலத்தையும், பிப்ரவரி 8ம் தேதி கடைபிடிக்கப்பட்ட மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளையும் ஒட்டி, தென்னாப்ரிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள சுற்றுமடலில், தென்னாப்ரிக்காவில், தங்கள் கண்களுக்கு எதிராகவே மனித வர்த்தகம் வளர்ந்து வருகிறது என்று வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.

நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான பள்ளிச் சிறுமிகளைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்களின் செய்தி, இறை அச்சம், மனித உயிர்களின் மதிப்பு இரண்டையும் இழந்தவர்களே மனித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.