2015-02-18 15:47:00

போக்கோ ஹாராம் கொடுமைகளுக்கு எதிராக, நைஜர் நாட்டில் பேரணி


பிப்.18,2015 ஆப்ரிக்காவின் நைஜீரியா, நைஜர், சாட், காமெரூன் ஆகிய நாடுகளில் போக்கோ ஹாராம் தீவிரவாதிகள் இழைத்து வரும் கொடுமைகளுக்கு எதிராக, நைஜர் நாட்டுத் தலைநகர் Niameyயில் இச்செவ்வாயன்று பேரணி ஒன்று நடந்தது.

நைஜர் நாட்டு அரசுத் தலைவர் Mamahadou Issoufou, மற்றும் பிரதமர் Brigi Rafini ஆகியோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் பல்லாயிரம் இளையோர் பங்கேற்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தப் பேரணியில் கலந்துகொள்ள கத்தோலிக்கர்களை அழைத்த GRAC Niger என்ற பெயர்கொண்ட கத்தோலிக்க அமைப்பினர், நம்மில் பிளவுகளை உருவாக்க போக்கோ ஹாராம் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க, நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என்று கூறி அழைப்பு விடுத்தனர்.

போக்கோ ஹாராம் தீவிரவாத அமைப்பின் வன்முறைகள், நைஜீரியாவைத் தாண்டி, நைஜர், சாட், காமெரூன் ஆகிய அண்மை நாடுகளையும் பாதிப்பது குறித்து, ஐ.நா. பொதுஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / dtnews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.