2015-02-18 15:39:00

சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தீர நாடுகளில் தபம்


பிப்.18,2015 சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தீரவேண்டும் என்ற நோக்கத்துடன், 45 நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் இணைந்து, பிப்ரவரி 18, இப்புதன் முதல் 40 நாட்களுக்கு தவக்கால உண்ணா நோன்பு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

உலக கத்தோலிக்க சுற்றுச்சூழல் இயக்கம் (The Global Catholic Climate Movement - GCCM) அறிவித்துள்ள இந்த உண்ணா நோன்பு முயற்சிகளில், ஆர்ஜென்டீனா, பிலிப்பின்ஸ், கென்யா, ஆஸ்திரேலியா, உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் கலந்து கொள்கின்றனர் என்று இவ்வியக்கத்தினர் கூறியுள்ளனர்.

பெரு நாட்டின் லீமா நகரில், 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற COP 20 மாநாட்டின் ஆரம்ப தினம் துவங்கி, 2015ம் ஆண்டு, நவம்பர் மாதம் 30ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் COP 21 மாநாடு நிறைவுறும் தேதி முடிய, 365 நாள் தொடர் உண்ணா நோன்பு முயற்சிகளை, GCCM அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொடர் உண்ணா நோன்பு முயற்சிகளின் ஓர் அங்கமாக, சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தீர இந்தத் தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உண்ணா நோன்பு அமையும் என்று உலக கத்தோலிக்க சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.