2015-02-17 15:32:00

வாஷிங்டன் நகரில் மிகப்பெரிய விவிலிய அருங்காட்சியகம்


பிப்.17,2015. விவிலிய வாசிப்பு, விவிலியக் கல்வி, விவிலியக் கலந்துரையாடல் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வாஷிங்டன் நகரில் மிகப்பெரிய விவிலிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

தலைநகர் வாஷிங்டனில் Capitol Hillக்கு அருகில் நான்கு இலட்சத்து முப்பதாயிரம் சதுர அடியில், 200 அடி தொலைக்காட்சித் திரைகளைக் கொண்டு நாற்பது கோடி டாலர் செலவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புடன் இது கட்டப்பட்டு வருகிறது.  

பச்சைநிற மேற்கூரை, விவிலிய உணவுகள் கொண்ட உணவகம், விவிலியப் பூந்தோட்டம் போன்றவையும் இதில் இடம்பெறும்.

சாக்கடல் சுருள்கள், குட்டன்பர்க் விவிலியப் பகுதிகள், பாப்பிரஸ் தொகுதிகள் உட்பட இதுவரை 44 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவிலியம் சார்ந்த பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.  

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.