2015-02-13 16:08:00

டில்லி கிறிஸ்தவப்பள்ளி தாக்குதல்,தலைவர்கள் கண்டனம்


பிப்.13,2015. டில்லியிலுள்ள கத்தோலிக்கப் பள்ளி ஒன்றின் மீது மர்ம நபர்கள் இவ்வியாழன் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

டெல்லியின் தெற்கில், Vasant Viharவிலுள்ள Holy Child Auxilium பள்ளியில், மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி, பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சில CCTV புகைப்படக் கருவிகளைச் சேதப்படுத்தியதோடு, தலைமை ஆசிரியர் அறையையும் சூறையாடியுள்ளனர் என்று டெல்லி உயர்மறைமாவட்டச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.

மேலும், ஏறக்குறைய 12 ஆயிரம் ரூபாய் காணாமல்போயுள்ளது என்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோதரி லூசி கூறினார்.

மேலும், டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இத்தாக்குதலுக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி காவல்துறை அதிகாரி BS Bassi அவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

டில்லியில் கடந்த 4 மாதங்களில் கிறிஸ்துவப் பள்ளி மற்றும் ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: IANS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.