2015-02-11 14:36:00

கடுகு சிறுத்தாலும்.... : தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்வோம்


 200 பேர் கூடியிருந்த ஓர் அரங்கத்தில் பேச்சாளார் ஒருவர், ஒரு 500 ரூபாய்த் தாளைக் காட்டி,  "யாருக்கு இது பிடிக்கும்?" எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளாரோ, “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன், ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி  அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரிசெய்து,  “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?” என்றார். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய்த் தாளைத் தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான தாளைக் காட்டி,  “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.  அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர். அவர் அவர்களை நோக்கி, “கேவலம் ஒரு 500 ரூபாய்த் தாள் பலமுறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும்போதும்,  தோல்விகளைச் சந்திக்கும்போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்வோம்” என்று சொன்னார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.