2015-02-10 15:45:00

தினசரி உணவில் கறிவேப்பிலையைத் தவிர்க்கக் கூடாது


பிப்.10,2015. கேரட்டைவிட, கறிவேப்பிலையில் நான்கு மடங்கு சத்துக்கள் அதிகம் உள்ளன என்பதால் தினசரி உணவில் கறிவேப்பிலையை தவிர்க்கக் கூடாது என கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் அறிவியலாளர் பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.

அதிக கால்சியம் சத்து, வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கினால் இச்சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் குறைந்து போகும் என்று கூறும் ராஜாங்கம், கேரட்டில் 1890 என்ற அளவில் விட்டமின் 'ஏ' சத்துக்கள் உள்ளன. அதுவே கறிவேப்பிலையில் நான்கு மடங்கு அதிகமாக நிறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உணவில் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உட்கொண்டால் எலும்புகளுக்கு கால்சிய சத்தும், விட்டமின் ஏ சத்துக்களும் கிடைத்து நலமாக வாழலாம், என்ற அவர், கறிவேப்பிலையில் சல்பர், பொட்டாஷியம் சத்துக்கள், விட்டமின் 'ஏ'யை விட சற்று குறைவாக காணப்படுவதால் பெண்களுக்கு கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்று கூறினார்.

மைசூரு 'புட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்' அமைப்பின் ஆராய்ச்சியில் கறிவேப்பிலையில் சத்துக்கள் நிறைந்துள்ளன என, கண்டுபிடித்துள்ளனர். தேசிய தர நிர்ணய அளவீடான 'ஐ.யு' (இன்டர்நேஷனல் யூனிட்)குறியீட்டின் அளவு 0.6 மைக்ரோ கிராம்.

 ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.