2015-02-10 10:46:00

இந்தியாவில் 7000 கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்


பிப்.10,2015. இந்தியாவில் 2014ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது 120 தாக்குதல்கள் நடத்தப்பட்டன மற்றும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர் என்று ஒரு கத்தோலிக்க அமைப்பு கூறியது.

மும்பை நகரை மையமாகக் கொண்டு இயங்கும் CSF என்ற கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்பு 2013ம் ஆண்டு டிசம்பருக்கும், 2014ம் ஆண்டில் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இக்காலக் கட்டத்தில், பிஜேபி கட்சி ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் 23, சத்திஷ்காரில் 19, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் 14 என நாடெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 120 தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று இவ்வறிக்கை கூறுகிறது.

1600 பெண்கள், 500 சிறார், 300 குருக்கள் மற்றும் பொதுநிலைத் தலைவர்கள் உட்பட ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும், புலம்பெயர்வையும் எதிர்கொண்டனர் என்று அவ்வமைப்பின் அறிக்கை கூறுகிறது. 

ஆதாரம் : Hindustan Times/வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.