2015-02-10 16:01:00

23வது உலக கத்தோலிக்க நோயாளர் தினம்


பிப்.10,2015. “பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன், காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்(யோபு 29:15)” என்ற தலைப்பில் 23வது உலக நோயாளர் தினம் இப்புதனன்று  கத்தோலிக்கத் திருஅவையில்  கடைப்பிடிக்கப்படுகிறது.

நோயாளிகள், சமூகநலப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் இத்துறையில் பணிபுரிவோர் அனைவரும் இதயத்தின் ஞானம் பற்றிச் சிந்திக்குமாறு, இந்நாளுக்கான தனது செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1992ம் ஆண்டில் இந்த உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார். லூர்து அன்னை விழாவாகிய பிப்ரவரி 11ம் தேதி இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

5,167 மருத்துவமனைகள், 17,322 சிறிய மருத்துவமனைகள், 648 தொழுநோயாளர் மையங்கள், 15,699 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி இல்லங்கள், 10,124 கருணை இல்லங்கள், 11,596 பால்வாடிகள், 14,744 திருமண ஆலோசனை மையங்கள், 3,663 சமூக மறுவாழ்வு மையங்கள், 36,389 மற்ற வகையான நிறுவனங்கள் என 1,15,352 நலவாழ்வு மையங்கள் கத்தோலிக்கத் திருஅவையில் உள்ளன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.