2015-02-06 16:10:00

குடியேற்றதாரருக்கு எல்லைகளை மூடுவது தோல்வியையே கொணரும்


பிப்.06,2015. குடியேற்றதாரர்கள் ஐரோப்பாவுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பார்கள் என்றும், அப்படி வருகிறவர்கள், அதிகாரப்பூர்வ மற்றும் சரியான ஆவணங்களுடன்  வந்து தங்குவதற்கு ஆவன செய்யுமாறும், ஐ.நா. அதிகாரி ஒருவர், ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

குடியேற்றதாரரின் மனித உரிமைகள் பற்றி கண்காணிக்கும் ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி François Crépeau அவர்கள், ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

2014ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் வந்தனர், இவ்வெண்ணிக்கை 2013ம் ஆண்டில் எண்பதாயிரம் என்றும் கூறினார் Crépeau.

குடியேற்றதாரருக்கு பன்னாட்டு எல்லைகளை மூடுவது இயலாத காரியம் என்றும், அவர்களின் வருகையை நிறுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுவதையும் தவிர்த்து, அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார் Crépeau.

ஆதாரம் :UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.