2015-02-06 14:58:00

கடுகு சிறுத்தாலும்.. : வன்மை அழியும், மென்மை வாழும்


சாகப்போகும் வேளையில் ஒரு ஞானி, தன்னுடைய சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை சொல்ல நினைத்தார். அனைவரையும் அழைத்து உட்கார வைத்து, அவர்களுக்கு தன்னுடைய பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.

'அவ்வளவுதான். வாழ்க்கைத் தத்துவம் இதுதான்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே ஒரு சீடர் மட்டும் துணிச்சலாக, ‘வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம்’  என்று ஞானியிடம் கேட்டார்.

ஞானி கேட்டார், 'என் வாய்க்குள் என்ன கண்டாய்?' என்று.

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!' என்றார் சீடர்.

'பல் இருந்ததா?' கேட்டார் ஞானி.

'இல்லை' என்பது சீடரின் பதிலாக இருந்தது.

'அதுதான் வாழ்க்கை. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

தத்துவத்தை புரியவைத்த நிம்மதியில் உறங்கச் சென்றார் ஞானி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.