2015-02-05 16:03:00

திருத்தந்தையுடன் Kiribati குடியரசின் தலைவர் சந்திப்பு


பிப்.05,2015 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள Kiribati குடியரசின் தலைவர் Anote Tong அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தார்.

Kiribati குடியரசில் அமைந்துள்ள தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பொதுவாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள அனைத்து தீவுகளின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்களை மையப்படுத்தி, இவ்வாண்டு டிசம்பர் மாதம், பாரிஸ் மாநகரில், ஐ.நா. அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள COP-21 கருத்தரங்கு குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

திருத்தந்தையைச் சந்தித்தபின், Kiribati அரசுத் தலைவர் Tong அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவு கொள்ளும் திருப்பீடத் துறையின் செயலர், ஆயர் Paul Gallagher அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.