2015-02-05 14:26:00

கடுகு சிறுத்தாலும் – ஆசைக்கும் எல்லை உண்டு


ஒரு நாள் கடவுள், ஓர் ஏழையின் சிரிப்பைக் காண விரும்பி, அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்று கேட்டார். உடனே அந்த ஏழை மனிதர், கடவுளே, எனக்கு, பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்று ஆசையோடு அடுக்கினான். உடனே கடவுள் தமது வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த அலமாரி தங்கமானது. ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது. அப்பொழுதும் அந்த ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருள்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் அந்த ஏழை மனிதர் சிரிக்கவில்லை. சோர்ந்து போன கடவுள் ஏழையிடம், “இன்னும் உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை மனிதர் “அந்த விரல் வேண்டும்”என்றான். கடவுள் அங்கேயே மயங்கி விழுந்தார்.(நன்றி-தமிழ் தத்துவங்கள்)

ஆசைக்கு அளவில்லை என்று சொல்கிறோம். ஆசை சிறிது சிறிதாக வளரும்போது, மனித மனம் எதையேனும் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் துன்புறுகிறது. முதுமொழிக்காஞ்சி சொல்கிறது-ஒருவருக்கு ஏற்படுகிற ஆசையைக் காட்டிலும் பெரிதான வறுமை ஏதுமில்லை என்று.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.