2015-02-03 15:47:00

வரலாற்றை மாற்றுவதற்கு 2015ம் ஆண்டு நல்ல வாய்ப்பு, ஐ.நா.


சன.03,2015. உலகில் இன்று அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற இளையோர் ஏழ்மையை அகற்றவும், வெப்பநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயல்படவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடவும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இத்திங்களன்று தொடங்கிய இளையோர் கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் வருங்கால உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகளை வடிவமைப்பதில் ஈடுபடுமாறு, இதில் கலந்துகொள்ளும் இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர், அதாவது 180 கோடிப் பேர் இளையோர் என்றும், இவர்களில் பலர் கஷ்டப்பட்டு வேலை தேடுகின்றனர் மற்றும் உலகில் இடம்பெறும் சண்டைகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் பான் கி மூன்.

இன்று உலகில் 7 கோடியே 30 இலட்சம் இளையோர் வேலை தேடுகின்றனர், இன்னும் பலர் சுரண்டப்படும் வேலைகளைச் செய்கின்றனர், அண்மை ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கு அதிகமான சிறார் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், இதனால் இந்நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று ஐ.நா. புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.