2015-02-03 16:04:00

முதல் அனைத்துலக செப தினம் பிப்ரவரி 08


பிப்.03.2015. இம்மாதம் 8ம் தேதி கடைப்பிடிக்கப்படும் முதல் அனைத்துலக செப தினம் பற்றி இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கினர் திருப்பீடப் பிரதிநிதிகள்.

திருப்பீட அர்ப்பண வாழ்வு பேராயம், திருப்பீட குடியேற்றதாரர் அவை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை ஆகிய மூன்றும் இணைந்து இச்செப தினத்தை ஏற்பாடு செய்துள்ளன.

அனைத்துலக மனித வர்த்தகத்துக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படும் பிப்ரவரி 8ம் தேதி ஞாயிறன்று, மனித வர்த்தகம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்கவும் முதல் அனைத்துலக செப தினம் கடைப்பிடிக்கப்படுவதாக, இத்திருப்பீட அவைகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

இன்று உலகில் இலட்சக்கணக்கான மனிதர்கள் வயது வேறுபாடின்றி தங்களின் சுதந்திரத்தை இழந்து அடிமைமுறையில் வாழ்வதற்கு கட்டாயமாக உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இக்கூட்டத்தில் கூறப்பட்டது.

கர்தினால் பீட்டர் டர்க்சன் மற்றும் நான்கு அருள்சகோதரிகள் முதல் அனைத்துலக செப தினம் பற்றி விளக்கினர்.

ஆப்ரிக்க அடிமைப் பெண்ணாகிய புனித ஜோஸ்பின் பக்கீத்தா விழா பிப்ரவரி 08,

    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.