2015-02-02 15:03:00

கடுகு சிறுத்தாலும்–முழு நம்பிக்கை வியப்புகளை விளைவிக்கும்


ஒருநாள், சுவாமி விவேகானந்தரின் ஆசிரமத்திலிருந்த ஒரு சீடருக்குக் கடும் காய்ச்சல். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர், மற்றொரு சீடரைக் கூப்பிட்டு, நீங்கள்  உள்ளே போய் குருதேவரின் படத்தை வணங்கி அந்தத் தீர்த்தத்தை சீடருக்குக் கொடுங்கள், காய்ச்சல் சரியாகி விடும் என்று கூறினார். சீடரும் அவ்வாறே செய்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை என்று வந்து சொன்னார் இன்னொரு சீடர். சற்றுப் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு குருதேவர் அறைக்குப் போன விவேகானந்தர், சிறிது நேரம் கழித்து கையில் தீர்த்தத்தோடு வந்தார். இதைக் கொண்டுபோய், சீடருக்குக் கொடுங்கள், காய்ச்சல் சரியாகி விடும் என்று கூறினார். சிறிது நேரத்தில் காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் போய், அச்சீடர் நலமடைந்தார். அப்போது சுவாமி விவேகானந்தர் அந்தச் சீடரிடம், உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. குருதேவர் இல்லையென்று நினைத்து விட்டீர்கள், ஆனால் அவர் இங்கேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

 

நம்பிக்கை கொண்டு வாழும் வாழ்வு அமைதியாக இருக்கும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.