2015-02-02 15:58:00

இந்திய இளைஞர்கள் மத சகிப்புத்தன்மையை வளர்க்க உதவ வேண்டும்


பிப்.02,2015. இந்திய இளைஞர்களின் மத சகிப்புத்தன்மை மற்றும் மதங்களிடையே உருவாக வேண்டிய உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் ஹென்றி டி சூசா.

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் பொறுப்பாக இருக்கும் ஆயர் ஹென்றி டி சூசா,  அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபரின் அண்மை இந்தியப் பயணம் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டபோது, சமூக இணக்க வாழ்வு என்பது அரசின் கடமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும், அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி சம உரிமையில் வாழ உழைக்க வேண்டியது குடிமக்களாகிய நம் கடமை என்றும் கூறினார்.

பல்வேறு மதப்பிரிவுகளிடையே ஒற்றுமையையும் மதசுதந்திரத்தையும் இந்தியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும்  அனுபவிப்பதோடு, இளைஞர்களின் கனவை நனவாக்க ஒருவருக்கொருவர் உதவ முடியும் எனவும் கூறினார் பெல்லாரி ஆயர் டி சூசா.

வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவோர், ஏனைய மதத்தினரை தங்கள் எதிரிகளாக நோக்காமலிருக்கவும், மத சகிப்புத்தன்மையை வளர்க்கவும் ஒவ்வொரு மதமும் கற்பிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார் ஆயர் டி சூசா.

ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.