2015-01-31 16:30:00

மியான்மார் கத்தோலிக்கரில் விவிலிய வாசிப்பு


சன.31,2015. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க அழைப்பை முன்வைத்து, மியான்மாரில் மறைக்கல்வி அறிவையும், விவிலிய வாசிப்பையும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் தொடர் விவிலியக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது தலத்திருஅவை.

மியான்மார் தலத்திருஅவையின் இந்நடவடிக்கை குறித்து CNA செய்தி நிறுவனத்திடம் பேசிய, அந்நாட்டின் தேசிய விவிலிய மறைப்பணி ஒருங்கிணைப்பாளர் அருள்பணி Bosco Saw அவர்கள், இக்கருத்தரங்குகளின் நோக்கத்தை விளக்கினார்.

கத்தோலிக்க விசுவாசிகள், இறைவார்த்தை மீது அன்புசெலுத்தி, அதனை வாசித்து வாழ்ந்து, பிறரோடு பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக மாற வேண்டுமென்பதே இவற்றின் நோக்கம் என்று கூறினார் அருள்பணி Saw.

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மாரில் கடந்த ஆண்டில் ஏறக்குறைய இருபது விவிலியக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.