2015-01-29 15:46:00

கெய்ரோவில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கு அரசு நில ஒதுக்கீடு


சன.29,2015. எகிப்து தலைநகர் கெய்ரோவில் புனித மாற்கு பேராலயத்தோடு தொடர்புடைய உள்கட்டமைப்புகள் மற்றும் அலுவலகங்களைக் கட்டுவதற்கென முப்பது ஹெக்டர் நிலப்பகுதியை காப்டிக் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தை நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது எகிப்திய அரசு.

கெய்ரோவில் பிற பகுதிகளில் இரு புதிய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை ஆலயங்களும், ஒரு காப்டிக் இவாஞ்சலிக்கல் சபை ஆலயமும் கட்டுவதற்கு மேலும் மூன்று சிறிய நிலப்பகுதியை வழங்கியுள்ளது எகிப்திய அரசு.

எகிப்திய அரசு ஆலயங்கள் கட்டுவதற்கென நிலம் ஒதுக்கியுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு நகர்ப்புற கட்டமைப்பு அமைச்சகம், பல்வேறு கிறிஸ்தவ சபைகள், கடந்த அக்டோபரில் அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் அவற்றின் உண்மையான மேய்ப்புப்பணி தேவைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.    

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.