2015-01-28 16:11:00

2014ல் சுற்றுலா சென்ற பயணிகளின் எண்ணிக்கை 113 கோடி


சன.28,2015. 2014ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலா சென்ற பயணிகளின் எண்ணிக்கை 113 கோடியை எட்டியுள்ளது, இவ்வெண்ணிக்கை 2013ம் ஆண்டைவிட 5 கோடியே 10 இலட்சம் அதிகம் என்று ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) அறிவித்தது.

2009ம் ஆண்டில் உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர், 2014ம் ஆண்டில் ஐந்தாவது ஆண்டாக உலக அளவில் சுற்றுலா சென்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.

ஏற்றுமதியில் கோடிக்கணக்கான டாலர் வருமானத்தையும், இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்களையும் இந்நிலை உருவாக்கி பொருளாதாரம் மேம்பட உதவியிருக்கின்றது என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, அமெரிக்க நாடுகளில் 7 விழுக்காடும், ஆசிய-பசிபிக் பகுதியில் 5 விழுக்காடும், ஐரோப்பாவில் 4 விழுக்காடும், மத்திய கிழக்கில் 4 விழுக்காடும், ஆப்ரிக்காவில் 2 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.