2015-01-22 15:57:00

கடுகு சிறுத்தாலும்...மனதை மாற்றும் பெருந்தன்மை


இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி அவர்கள் சிறையில் இருந்தபோது, ஒருநாள் ஒரு வெள்ளையின அதிகாரி அவரை உதைத்துத் தள்ளினார். காந்திஜி அவர்கள் எதுவும் பேசவில்லை. அந்த அதிகாரியும் மகாத்மாவை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து மகிழ்ந்தார். சிலநாள்கள் கழித்து காந்திஜி அந்த வெள்ளையின அதிகாரியைச் சந்தித்தார். ஒரு ஜோடி காலணிகளை அன்போடு அவரிடம் நீட்டிச் சொன்னார்- ஐயா, தங்களின் கால்களுக்கு ஏற்றவாறு என் கைகளால் இந்தக் காலணிகளைச் செய்துள்ளேன். தங்களின் கால்கள் வலிக்கக் கூடாது, தயவுசெய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று. காந்திஜியின் செயலைப் பார்த்த அந்த அதிகாரி, இப்படியும் ஒரு மனிதரா என்று திகைத்துப் போனார். அந்தக் காலணிகளை அவர் வாங்கிக் கொண்டார். ஆனால் அதைப் பயன்படுத்தாமல் தனது பூஜை அறையில் வைத்து வழிபட்டார்.

பணிவான உள்ளம், தெரிந்தே செய்கிற தவறைக்கூட மன்னிக்கிறது. தவறு செய்பவரையும் மனமாற்றுகின்றது. பெருந்தன்மை மனிதத்தை உயர்த்தி நிறுத்தும், அது வாழ்வில் ஒளியூட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.