2015-01-21 16:12:00

நைஜர் கத்தோலிக்கருடன் திருப்பீடம் ஒருமைப்பாட்டுணர்வு


சன.21,2015. நைஜர் நாட்டில் பணியாற்றும் மேய்ப்புப் பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்கருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயம்.

அண்மை நாள்களில் நைஜர் நாட்டில் ஆலயங்கள் மற்றும் துறவு இல்லங்கள் தாக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயச் செயலர் பேராயர் சாவியோ ஹான் தாய்-ஃபாய் அவர்கள், இந்நாட்டில் கிறிஸ்தவ ஆலயங்கள், குறிப்பாக, கத்தோலிக்க ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது கவலை தருவதாகத் தெரிவித்துள்ளார்.

மனிதரின் அடிப்படை உரிமையை மீறுவதற்கும், இறப்புக்களையும் துன்பங்களையும் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கும் கடவுளின் பெயரை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் ஹான் தாய்-ஃபாய்.

பாரிசிலிருந்து பிரசுரமாகும் சார்லி ஹெப்தோ வார இதழ், மதங்களையும் அரசியலையும் கிண்டல் செய்து செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வருகின்றது. வழக்கமாக 50,000 பிரதிகளை அச்சடிக்கும் சார்லி ஹெப்தோ வார இதழ், 30 இலட்சம் பிரதிகளுடன் வெளிவர உள்ளது என ஓர் ஊடகச் செய்தி கூறுகிறது.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.