2015-01-20 16:21:00

அனைத்துலக மின்னணு ஒளி ஆண்டு 2015


சன.20,2015. உலகில் உறுதியான வளர்ச்சிக்கு, ஒளியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் ஆற்றும் பணி, 21ம் நூற்றாண்டின் சவால்களை அனைத்துலக சமுதாயம் எதிர்கொள்வதற்கு உதவ முடியும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

அனைத்துலக மின்னணு ஒளி ஆண்டை சனவரி 19, இத்திங்களன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், ஆற்றல், கல்வி, வேளாண்மை, நலவாழ்வு ஆகியவற்றில் மின்னணு ஒளி ஆற்றிவரும் முக்கிய பங்கை இந்த 2015ம் ஆண்டில் ஐ.நா. வெளிப்படுத்த முயற்சிக்கின்றது என்று கூறினார்.

ஏழ்மையை அகற்றி வளமை பகிர்ந்துகொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் இக்காலத்தில், ஒளியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள், உலகின் சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறினார் பான் கி மூன்.

2015ம் ஆண்டு, அனைத்துலக மின்னணு ஒளி ஆண்டு. இந்த உலக ஆண்டை பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் தொடங்கி வைத்தார் பான் கி மூன்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.