2015-01-19 15:35:00

கடுகு சிறுத்தாலும்... மகிழ்ச்சிக்கு எத்தனையோ வழிகள்


ஓர் ஊரில் ஒரு வயதான அம்மா எப்பொழுதும் அழுதுகொண்டே இருந்தார்கள். ஆனால் அந்த ஊரில் யாருக்குமே அவர் அழுவதற்கான காரணம் தெரியவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். இந்த அம்மா அழுதுகொண்டே இருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்டார். அந்த அம்மாவிடம் துறவி சென்று, ஏனம்மா இப்படி அழுதுகொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா, எனக்கு இரு மகள்கள். ஒருவரின் கணவர் குடை விற்பவர். மற்றவரின் கணவர் செருப்பு தைப்பவர். வெயில் காலத்தில் குடை அதிகம் விற்காது. அதனால் அந்த மகள் வறுமையில் வாடுவாள். மழைக் காலத்தில் செருப்பு அதிகம் விற்காது. அதனால் அந்த மகளும் கஷ்டப்படுவார். அதை நினைத்துத் தினமும் அழுதுகொண்டிருக்கிறேன் என்றார். அதைக் கேட்ட துறவிக்குச் சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. துறவி சொன்னார் - மழைக் காலத்தில் குடை அதிகம் விற்கும். அதில் கிடைக்கும் வருவாயில் அந்த மகள் வசதியாக வாழ்வார். வெயில் காலத்தில் செருப்பு அதிகம் விற்கும். அதில் கிடைக்கும் வருவாயில் அந்த மகள் வசதியாக வாழ்வார். இதை மறந்து விட்டீர்களா என்று. அப்பொழுதுதான் அந்த வயதான அம்மாவுக்கு அறிவு தெளிந்தது. 

மகிழ்ச்சியடைய எத்தனையோ காரியங்கள் உள்ளன. அதைவிட்டுவிட்டுத் துன்பங்களையே தோளில் சுமப்பது ஏன்? மகிழ்வான நேரங்களை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.