2015-01-16 16:31:00

திருத்தந்தை கொண்டுவந்துள்ள நெருப்பு தூய்மைப்படுத்துவதற்கு


சன.16,2015. திருத்தந்தையே, தாங்கள் பிலிப்பீன்ஸ் நாட்டில் நெருப்பைக் கொண்டு வந்துள்ளீர்கள், அது அழிப்பதற்கு அல்ல, ஆனால் அது தூய்மைப்படுத்துவதற்கு; திருத்தந்தையே, தாங்கள் நிலநடுக்கத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள், ஆனால் அது அசைப்பதற்கு அல்ல, விழித்தெழச் செய்வதற்கு; திருத்தந்தையே, தாங்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளீர்கள், அது உறுதிப்படுத்துவதற்கு, ஊக்கப்படுத்துவதற்கு என்று கூறினார் கர்தினால் தாக்லே.

மனிலா அமலமரி பேராலயத்தில் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தைக்கு நன்றி கூறியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் தாக்லே.

இந்தப் பேராலயம் ஏழு தடவைகள் போர்களாலும், பேரிடர்களாலும் அழிக்கப்பட்டன, ஆனால் அது எப்போதும் மீண்டும் கட்டப்பட்டது. இது பிலிப்பினோ மக்களின் அடையாளமாக, இசையாலும் விசுவாசத்தாலும் முழுவதும் நிறைந்ததாய் உள்ளது என்று கூறினார் கர்தினால் தாக்லே.

மனிலா அமலமரி பேராலயம் இரண்டாம் உலகப் போரின்போதும் குண்டுவீச்சால் அழிக்கப்பட்டது. இதுவே பிலிப்பீன்ஸின் முதல் பேராலயம். முதலில் கட்டப்பட்ட பேராலயம் நெருப்பால் அழிந்தது. அடுத்து கட்டப்பட்ட ஐந்து பேராலயங்கள் நிலநடுக்கத்தால் முழுவதும் அல்லது ஒரு பகுதி அழிக்கப்பட்டது. 1863ல் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் இது சேதமாகியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.