2015-01-14 15:23:00

கடுகு சிறுத்தாலும்... சிறப்புக்குரியது பெருந்தன்மை


அக்காலத்தில் பஞ்சாபில் இருந்த ரணவீர் சிங் என்ற மன்னர் ஒருநாள் தன் காவலர்களுடன் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தலையில் ஒரு கல் வந்து விழுந்தது. கோபமடைந்த மன்னர் அது யார் என்று அறியுமாறு காவலர்களிடம் கூறினார். சுற்றுமுற்றும் பார்த்த காவலர்கள் ஒரு மரத்தடியில் வயதான ஒரு பெண் பரிதாபமாக நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அவரை மன்னரிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னர் அவரிடம், அம்மா, என் தலைமீது ஏன் கல் எறிந்தீர்கள், இதற்கு என்ன தண்டனை தெரியுமா? எனக் கேட்டார். திடுக்கிட்ட அந்தப் பாட்டி, மன்னா, நான் ஓர் ஏழை. எனக்கு ஒரு பேரன் இருக்கிறான். அவன் இரண்டு நாள்களாகச் சாப்பிடாமல் பசியால் துடிக்கிறான். எனவே மரத்திலிருந்து பழங்களை கீழே விழ வைப்பதற்காக கல் எறிந்தேன். அது தவறுதலாக தங்களின் தலைமீது விழுந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். இந்தப் பாட்டிக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறதோ என அங்கிருந்தவர்கள் பயந்துகொண்டிருந்தனர். ஆனால் மன்னரோ அவர்களிடம், இந்த மூதாட்டிக்குப் பொன்னையும் பொருளையும் கொடுத்தனுப்புங்கள் என்றார். கல்லால் அடிக்கும்போது சாதாரண மரமே பழம் தரும்போது மன்னன் இந்த வயதான தாயைத் தண்டிக்கலாமா? பொன்னையும் பொருளையும் கொடுப்பதுதானே முறை என்று சொன்னார் மன்னர்.

பெருந்தன்மை சிறப்புக்குரியது

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.