2015-01-08 16:21:00

கடுகு சிறுத்தாலும் : இரசித்து வாழ்


ஜார்ஜ் பெர்னார்டு ஷா அவர்கள், ஒருநாள், தன்னோடு இருந்தவர்களிடம், நான் இறந்துவிட்டால் என் பிணத்திற்குப் பின்னாலே ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் வரும், இது ஏன் தெரியுமா? என்று கேட்டாராம். கூட இருந்தவர்கள் பதில் தெரியாமல் முழிக்கவே அவர் சொன்னாராம் - நான் ஒரு சைவப் பிரியன், சைவ உணவுக்காரன், அதனால் எனக்கு நன்றி தெரிவிக்கவே இந்த விலங்குகள் வரும் என்று. இப்படி இவர் நகைச் சுவையாகப் பேசுவதோடு குலுங்கிக் குலுங்கிச் சிரித்து பிறரை மகிழ்ச்சிப்படுத்துவாராம். இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற நாடக ஆசிரியராக விளங்கிய பெர்னார்டு ஷா அவர்கள், நகைச்சுவை உணர்வோடு மட்டுமே வாழ்க்கையைப் பார்த்தவர். 93 வயது வரை வாழ்ந்த இவர் தனது முதுமையை மிகவும் இரசித்தவர்.

 

"கவலை, நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது"(பீட்டர்). மனித வாழ்வு ஒரு கொடை. அதை இரசித்து சிறப்புற வாழ்ந்துவிடு

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.