2014-12-30 15:58:33

பாகிஸ்தானில் விசுவாசத்தை வாழ்வது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவால்


டிச.30,2014. பாகிஸ்தானில் விசுவாசத்தை வாழ்வது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலாக உள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் கூறினார்.
பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாத மக்கள் தினமும் எதிர்கொள்ளும் கடின வாழ்வு குறித்து Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் விளக்கிய, Faisalabad ஆயர் Joseph Arshad அவர்கள், கடந்த சில ஆண்டுகளில் அடிப்படைவாதக் குழுக்களின் தாக்கம் கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது என்று கூறினார்.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருப்பதால், அந்நாட்டினர் பலர் மாற்றங்களை விரும்பாமல் மௌனமாக இருக்கின்றனர் என்றும், முஸ்லிம் தலைவர்களுடன் நல்லுறவுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறினார் ஆயர் Arshad.
பாகிஸ்தானின் 18 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அந்நாட்டில் 60 விழுக்காட்டினர் கல்வியறிவற்றவர்கள் என்றும் உரைத்த ஆயர், கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

ஆதாரம் : A id to the Church in Need







All the contents on this site are copyrighted ©.