2014-12-30 15:58:46

தாய்லாந்தில் ஜூபிலி ஆண்டு


டிச.30,2014. தாய்லாந்து நாட்டில் முதல் Ayutthaya மாமன்றம் நடைபெற்றதன் 350ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் புனித ஆண்டைத் தொடங்கியுள்ளனர்.
தாய்லாந்தில் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் பேரார்வத்தைத் தூண்டும் நோக்கத்திலும் இந்த ஜூபிலி புனித ஆண்டை அறிவித்துள்ள ஆயர்கள், இந்த ஆண்டின் ஒரு நிகழ்வாக, வருகிற ஏப்ரல் 20 முதல் 25 வரை “கிறிஸ்துவின் சீடர்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை வாழ்கின்றனர்” என்ற தலைப்பில் முதல் மாநாட்டையும் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த டிசம்பர் 6ம் தேதி நிறைவேற்றிய ஆடம்பரத் திருப்பலியில் மூன்றுமுறை gong மணியை ஒலிக்கச் செய்து இந்த ஜூபிலி புனித ஆண்டைத் தொடங்கி வைத்தனர் ஆயர்கள்.
தாய்லாந்தின் முன்னாள் தலைநகராகிய Ayutthayaவில் 1664ம் ஆண்டில், அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையின் முதல் மாமன்றம் நடைபெற்றது. இதன் 350ம் ஆண்டின் நிறைவாக, வத்திக்கானும் நினைவு தபால்தலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.