2014-12-27 14:44:52

நீதியைத் தேடும் பாலஸ்தீனியர்கள் மத்தியில் கிறிஸ்மஸ் செய்தி எதிரொலிக்கின்றது


டிச.27,2014. நீதியைத் தேடும் பாலஸ்தீனியர்கள் மத்தியில் இயேசுவின் செய்தி அன்பையும் அமைதியையும் எதிரொலிக்கச் செய்கின்றது என்று பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.
பாலஸ்தீனாவின் காசாவில் வாழும் மக்களுக்காகவும், எருசலேம், பாலஸ்தீனியர்களின் தலைநகராக அமையவும், ஹமாஸ் புரட்சியாளர்களுக்கும் தனது Fatah கட்சிக்குமிடையே ஒற்றுமை நிலவவும் வேண்டுமெனத் தான் செபிப்பதாகக் கூறியுள்ளார் Abbas.
காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துவரும் இவ்வேளையில், தேசிய ஒன்றிப்புக்காக முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இதற்கு உலக சமுதாயம் உதவி செய்ய வேண்டுமெனவும் கேட்டுள்ளார் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas.
ஈராக்கிலும் சிரியாவிலும் கிறிஸ்தவ சமூகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளது மற்றும் பயங்கரவாத நிறுவனங்களால் மதங்களின் விசுவாசிகள் கொல்லப்படுவது குறித்த கவலையையும் தனது கிறிஸ்மஸ் செய்தியில் வெளியிட்டுள்ளார் Abbas.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.