2014-12-27 14:45:10

2015, அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டு


டிச.27,2014. கணனிகள், புகைப்பட கருவிகள், மின் சமையல் கருவிகள், கதிரியக்கக் கருவிகள் என பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளின் ஒளி, நம் அன்றாட வாழ்விலும், வருங்கால சமுதாயத்தின் வளர்ச்சியிலும் கொண்டிருக்கும் முக்கிய இடத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் 2015ம் ஆண்டை அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா.நிறுவனம்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ 2012ம் ஆண்டில் பரிந்துரைத்ததன் பயனாக, ஐ.நா. பொது அவை, 2015ம் ஆண்டை அனைத்துலக ஒளி-மின்னியல் ஆண்டாக அறிவித்துள்ளது.
மருத்துவம், தொடர்பு சாதனங்கள், பொழுதுபோக்குகள், கலாச்சாரம், தொழிற்சாலைகள், என எல்லாத் துறைகளிலும் மின் ஒளி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகின்றது.
ஒளி அறிவியலின் 1000 ஆண்டுகள், 200 ஆண்டுகள் 150 ஆண்டுகள், 100 ஆண்டுகள் மற்றும் 50 ஆண்டுகள் வரலாறு இந்த 2015ம் ஆண்டில் நினைவுகூரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO, 2015ம் ஆண்டை அனைத்துலக மண்வள ஆண்டாகவும் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மண்வள தினத்தன்று இந்த உலக ஆண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.