2014-12-26 15:53:49

இஸ்ரோ தலைவர் 2014ம் ஆண்டின் பத்து சிறந்த அறிவியலாளர்களில் ஒருவராகத் தேர்வு


டிச.26,2014. 2014ம் ஆண்டின் உலகி்ன் சிறந்த பத்து அறிவியலாளர்கள் பட்டியலில் ஒருவராக, இந்திய அறிவியலாளர் இராதாகிருஷ்ணன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் முதல் பத்து இடங்களைப் பெறும் அறிவியலாளர்களைப் பட்டியலிட்டு வெளியிடும், இலண்டனில் இருந்து வெளிவரும் Nature என்ற அறிவியல் இதழ், இவ்வாண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(இஸ்ரோ) தலைவர் அறிவியலாளர் இராதாகிருஷ்ணன் அவர்களையும் தெரிவுசெய்துள்ளது.
சந்திராயன் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்து உலகத்தை இந்தியாவி்ன் மீது பதிய வைத்த இவரின் திறமையைப் பாராட்டியுள்ளது அந்த இதழ்.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
கேரளாவில் பிறந்த இராதாகிருஷ்ணன் அவர்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானி்க்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார். பெங்களூருவில் எம்.பி.ஏ., பட்டமும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதன் பின்னர் 1973ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தார். 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் இவர்
மேலும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கணனி தொழில்நுட்ப அறிவியலாளர் Radhika Nagpal என்பவரும் இந்த பத்து அறிவியலாளர்கள் பட்டியலில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Livemint








All the contents on this site are copyrighted ©.