2014-12-20 16:12:58

திருத்தந்தை பிரான்சிஸ் : திருநற்கருணை முன்பாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும்


டிச.20,2014. “இயேசு நம் வாழ்வின் மையமாக மாற வேண்டுமெனில், திருநற்கருணைப் பேழையின் முன்பாக, அவரின் பிரசன்னத்தில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஹாலந்து, சான் மரினோ, அர்ஜென்டீனா ஆகிய நாடுகளின் திருப்பீடத்துக்கான புதிய தூதர்களான Jaime Bernardo, Clelio Galassi, Eduardo Félix Valdés ஆகிய மூவரையும் இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார் திருத்தந்தை.
மேலும், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean‑Louis Tauran அவர்களை Chamberlainவாகவும், பேரருள்திரு Giampiero Gloder அவர்களை உதவி Chamberlainவாகவும் நியமித்துள்ளார் திருத்தந்தை.
Chamberlain என்பது, திருப்பீடத்தின் சொத்து மற்றும் வருவாயின் நிர்வாகி ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.