2014-12-20 16:13:39

2014ல் துன்பங்களால் எண்ணற்ற உயிர்கள் பலி, ஐ.நா.


டிச.20,2014. ஆட்சிமாற்றம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானில் 2013ம் ஆண்டைவிட 2014ம் ஆண்டில் அப்பாவி மக்களின் இறப்பு ஏறக்குறைய இருபது விழுக்காடு அதிகம் எனவும், இவ்வெண்ணிக்கை இந்த டிசம்பர் முடிவதற்குள் பத்தாயிரத்துக்கு அதிகமாகும் என்று ஐ.நா. பணியாளர்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் ஐ.நா. பணியாளர்கள் 2008ம் ஆண்டிலிருந்து பதிவு செய்துள்ள அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் ஆட்சிமாற்றம் இடம்பெறும் சூழலில், துன்பங்களால் எண்ணற்ற மக்கள் பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது.
2014ம் ஆண்டு சனவரியிலிருந்து 3,188 அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் மற்றும் 6,429 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் என்று UNAMA என்ற ஆப்கான் ஐ.நா. பணியாளர்கள் கூறினர்.
இதில் 75 விழுக்காட்டு இறப்புகளுக்கு, தாலிபான்களே காரணம் எனவும் ஐ.நா. பணியாளர்கள் கூறினர்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.