2014-12-19 16:15:49

கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆலயங்களைப் பாதுகாப்போம், எகிப்து முஸ்லிம் தலைவர்கள்


டிச.19, 2014. கிறிஸ்மஸ் அண்மித்து வரும் இந்நாள்களில் கடந்த காலத்தைப் போலவே இந்த ஆண்டும் எகிப்தில் உள்ளூர் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக, முஸ்லிம் தீவிரவாதிகள் வலைத்தளங்களில் அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறுவது, கிறிஸ்தவர்களின் விழாக் கொண்டாட்டங்களில் மறைமுகமாகப் பங்குகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் தீவிரவாதிகள் வலைத்தளங்களில் அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடேயை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள எகிப்தின் கல்வியாளர்கள், கிறிஸ்தவர்களோடு சேர்ந்து தாங்கள் கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்போம் எனக் கூறியுள்ளனர்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த காப்டிக் கத்தோலிக்க ஆயர் Anba Antonios Aziz Mina அவர்கள், அச்சுறுத்தல்களும் அவமரியாதைகளும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன, ஆனால் நாங்கள் அமைதியில் கொண்டாடுவோம் என்று கூறினார்.
இத்தகைய தீவிரவாத மற்றும் தீய செயல்கள், உண்மையான பல முஸ்லிம்களை கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கின்றன என்றும் ஆயர் Anba அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.