2014-12-17 16:19:48

இளையோரைக் காப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையில் அனைத்துக் கண்டங்களின் பிரதிநிதிகள்


டிச.17,2014. கத்தோலிக்கத் திருஅவையின் பணியாளர்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் இளையோரைக் காப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையில் மேலும் சிலர் இணைக்கப்பட்டு, தற்போது, இவ்வவையில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Sean O'Malley அவர்கள் தலைமையில் இயங்கிவரும் இக்குழுவில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஓசியானியா ஆகிய அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
மனநலஇயல், நன்னெறி இயல், இறையியல், சமூகவியல், திருச்சட்ட அவை இயல் ஆகிய பல்வேறு துறைகளில் தேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
17 பேர் கொண்ட இக்குழுவில், இரு பெண் துறவியர் உட்பட, 8 பெண்களும், ஐந்து அருள் பணியாளர்கள் உட்பட, 9 ஆண்களும் இடம் பெறுகின்றனர்.
இவ்வுறுப்பினர்களில் ஓர் ஆணும், பெண்ணும் தங்கள் இளவயதில் பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.