2014-12-15 16:36:57

திருத்தந்தை : ஒன்றிப்பையும் இணக்கவாழ்வையும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்


டிச.15,2014. பிரச்சாரத்திற்கும், கொள்கைப் பரப்பிற்கும், அரசியல் காரணங்களுக்கும், பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டிற்கும், சமூகத் தொடர்புச்சாதனங்கள் பயன்படுத்தப்படும் இன்றையச் சூழலில், கத்தோலிக்கச் சமூகத்தொடர்பாளர்களின் வித்தியாசமானப் பணி பாராட்டிற்குரியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'T.V. 2000' என்ற இத்தாலிய கத்தோலிக்க தொலைக்காட்சிப் பணியாளர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்புத்துறையின் உண்மையான மதிப்பீடுகளைப் போற்றிப் பாதுகாப்பது கத்தோலிக்கப் பணியாளர்களுக்கு எப்போதும் ஒரு சவாலாகவே உள்ளது என்றார்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தருவது போலவும், பொறுப்புணர்வுகளின் மாற்றுத் தீர்வாகவும் பலவிடயங்களை இன்றைய சமூகத்தொடர்பு சாதனங்கள் பொய்யாக முன்வைப்பது குறித்த கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பையும் இணக்க வாழ்வையும் கட்டியெழுப்புவது அனைத்து ஊடக நிகழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.