2014-12-09 15:48:46

திருத்தந்தை : எட்டுப் பெண்களின் வீரத்துவமான வாழ்வுமுறை ஏற்பு


டிச.09,2014. மூன்று முத்திப்பேறு பெற்ற பெண்கள் உட்பட எட்டுப் பெண்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளையும், அவர்களின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளையும் அங்கீரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரு பாலஸ்தீனிய அருள்சகோதரிகள், பிரான்சில் துறவு சபை ஒன்றை நிறுவிய ஒரு ப்ரெஞ்ச் பெண் ஆகிய மூவரையும் புனிதர்கள் என அறிவிப்பதற்குத் தேவையான புதுமைகளை அங்கீரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாலஸ்தீனாவின் முதல் துறவு சபையாகிய எருசலேம் புனித செபமாலை தொமினிக்கன் சகோதரிகள் சபையைத் தொடங்கிய இறையடியார் Mary Alphonsine Danil Ghattas(1843-1927), காலணியணியாத கார்மேல் சபையின் மெல்கிதே வழிபாட்டுமுறையின் இறையடியார் Mariam Baouardy(1846-1878), பிரான்சில் அமலமரி சபையைத் தொடங்கிய இறையடியார் Jeanne Emilie De Villeneuve(1811-1854) ஆகிய மூவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இரு திருமணமான தாய்மார், மூன்று அருள்சகோதரிகள் ஆகியோரின் வாழ்வில் விளங்கிய வீரத்துவமானப் பண்புகளையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை.
இஸ்பானியாரன திருமதி Prassede Fernandez Garcia அவர்கள், நான்கு குழந்தைகளின் தாய் மற்றும் இத்தாலியரான திருமதி Elisabetta Tasca அவர்கள் 13 குழந்தைகளின் தாய்.
மேலும், “குடும்பம் ஓர் அன்பின் சமூகம், இங்கு நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள பிறரோடும், உலகோடும் உறவு கொள்வதற்குக் கற்றுக்கொள்கிறோம்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாய்க்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.