2014-12-03 16:12:01

திருத்தந்தை பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருவதை அரசியலாக்க வேண்டாம் - மணிலா கர்தினால் தாக்லே


டிச.03,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருவதை அரசியலாக்க வேண்டாம் என்று மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
சனவரி 15ம் தேதி முதல் 19ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தை ஒரு மேய்ப்புப்பணி நிகழ்வாக மட்டுமே காணவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது திருத்தூதுப் பயணத்தை, அதிகச் செலவு இல்லாத வகையில் நடத்தவும் பிலிப்பின்ஸ் தலத்திருஅவை தீர்மானித்துள்ளதாக கர்தினால் தாக்லே அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கு வரும் திருத்தந்தையின் பயணம், அரசியல் சாயம் பூசப்படாமல், ஆடம்பரம் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெறவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தியதாக, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.