2014-12-01 16:24:13

பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் அடிமைகள்


டிச.01,2014. பிரித்தானிய அரசில், முன்னர் நம்பப்பட்டதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது, 13,000 பேர் வரை அடிமை நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக அறிவித்துள்ளது.
இப்புதிய தகவல், உண்மையில் அதிர்ச்சியைத் தருவதாக உள்துறை அமைச்சர் தெரேஸா மே கூறியுள்ளார்.
அடிமைகளாக நடத்தப்படுபவர்களுள் பெரும்பகுதியினர், விவசாயத்திலும், மீன்பிடிப் படகுகளிலும் பணியாற்றுபவர்களாகவும், பாலியல் தொழிலாளராகவும், அல்லது வீட்டு வேலை செய்பவராகவும் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் அடிமைத்தனம் எந்த அளவிற்கு தீவிரமாக ஊடுருவியுள்ளதென கண்டறிவதற்காக பிரித்தானிய அரசு முதன்முதலில் நடத்திய ஆய்வு இதுவாகும்.

ஆதாரம் : தமிழ்வின்








All the contents on this site are copyrighted ©.