2014-12-01 16:23:54

நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், பேராயர் கண்டனம்


டிச.01,2014. நைஜீரியாவில் தற்போது இஸ்லாமியர்களையும், போகோ ஹாரம் தீவிரவாதிகள் பெரிய அளவில் கொலைசெய்துள்ளது, அவர்களின் கொடூர முகத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர்.
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை மட்டுமல்ல, தங்கள் தீவிரவாதத்திற்கு உடன்படாத மிதவாத இஸ்லாமியர்களையும் இவர்கள் கொன்றுவருகிறார்கள் என, கடந்த வெள்ளியன்று கானோ நகரில் இடம்பெற்ற கொடூர தாக்குதலை மேற்கோள்காட்டி கூறினார் நைஜீரியாவின் Jos உயர்மறைமாவட்ட பேராயர் Ignatius Ayau Kaigama.
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவின் மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுதம் ஏந்தியோர் துப்பாக்கியால் சுட்டதுடன், குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
நகரிலுள்ள முக்கிய சவக்கிடங்குக்கு இதுவரை 200 சடலங்கள் வந்துள்ளதை, தான் எண்ணியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மசூதி, கானோ நகரின் எமீரான இரண்டாம் முகமது சனூசியின் மாளிகைக்கு அருகில் உள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்த அவருக்கு எதிரான தாக்குதல் இது என அஞ்சப்படுகிறது.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.