2014-12-01 16:22:01

கோஸ்டா ரிக்காவின் திருப்பீடத்திற்கான தூதர் பதவியேற்பு


டிச.01,2014. கோஸ்டா ரிக்கா நாட்டிலிருந்து திருப்பீடத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள Marco Vinicio Vargas Pereira அவர்கள், இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து தன் நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, பதவியேற்றார்.
திருப்பீடத்திற்கான கோஸ்டா ரிக்காவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள Vargas Pereira அவர்கள், ஏற்கனவே Belize, Uruguay ஆகிய நாடுகளுக்கான தூதராகப் பணியாற்றியுள்ளார்.
இதே திங்களன்று, தொமினிக்கன் குடியரசுக்கான திருப்பீடத்தூதர், பேராயர் Jude Thaddeus Okolo, கானா நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Jean-Marie Speich, முன்னாள் திருப்பீடச்செயலர் கர்தினால் Tarcisio Bertone ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.